Cumming Tamil school reopens in August 2024 – for the next academic year
〰️
Cumming Tamil school reopens in August 2024 – for the next academic year 〰️
Get ready to spice up your Tamil skills!
Welcome to Our Quirky Services
$99
Embrace the peculiarities of this oddball experience.
$149
Dive deep into the wacky world of this service.
$199
Explore the eccentricity and delight in the unusual.
சிறப்புச் செயல்பாடுகள்
பள்ளி ஒருங்கிணைவு நேரம்
பள்ளிக்கு வந்தவுடன் இறைவணக்க நேரத்தில் குழந்தைகளை மகிழ்விக்கும் பொருட்டு ராமு, சோமு என்ற இரண்டு மந்திகள் பல நல்ல செய்திகளை அவர்களுக்கே உரித்தான நகைச்சுவை உணர்வுடன் சொல்லித் தருகின்றார்கள். குழந்தைகளும் மிகுந்த மகிழ்ச்சியோடு அவர்களுடன் கலந்துரையாடுகின்றனர். மேலும் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகுப்பிலிருந்து ஒரு மாணவர் ஏதேனும் தமிழ் தொடர்பான அரிய செய்தியை மற்ற மாணவர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும் அந்த மாதத்தில் பிறந்தநாள் கொண்டாடும் குழந்தைகளுக்குத் தமிழில் பிறந்தநாள் பாட்டு பாடி வாழ்த்து தெரிவிக்கப்படுகின்றது. இறுதியாக நாட்டுப் பண்ணுடன் ஒருங்கிணைவு நேரம் முடிவடைந்து அனைவரும் அவரவர் வகுப்பிற்குச் செல்வர்.
சிறப்புக் கல்வி நேரம்
கம்மிங் தமிழ்ப் பள்ளியில் வகுப்பு தொடங்கி முதல் பத்து நிமிடங்கள் சிறப்புக் கல்வி நேரத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு சிறப்பு தலைப்பு எடுத்துக் கொள்ளப்பட்டு அந்தத் துறையைப் (உதாரணமாக :முத்தமிழ்) பற்றி ஆண்டு முழுவதும் எடுத்துச் சொல்லப்படும். இதன் பயனாக பாடப் புத்தகங்களில் இருப்பதைத் தவிர மாணவர்களுக்கு புதிதாக ஒரு துறையைப் பற்றிய தெரிதல் இருக்கும்.
தங்க நாணயப் பரிசு
வகுப்பில் பாடங்களைக் கவனித்து, ஆர்வத்தோடு அனைத்து வகையிலும் வகுப்பில் தனது பங்களிப்பை நல்கும் குழந்தைகளுக்கு ஒரு தங்க நாணயம் வகுப்பு ஆசிரியரால் வழங்கப்படும். ஐந்து தங்க நாணயங்களைப் பெறும் குழந்தைகளை ஊக்குவிப்பதற்காக ஒரு சிறப்புப் பரிசு வழங்கப்படும்.
திருக்குறள் நேரம்
மாணவர்கள் நற்றமிழ், கன்னித்தமிழ், பைந்தமிழ் என்று மூன்று குழுவாகப் பிரிக்கப்பட்டு மாதம் ஒரு முறை அவர்களுக்குத் திருக்குறள் போட்டி நடத்தப்படும். திருக்குறள் போட்டி நாளன்று வகுப்பில் ஒரு திருக்குறளை அதன் பொருளுடன் மாணவர்கள் கூற வேண்டும். எந்தக் குழு ஒவ்வொரு மாதமும் மிகச்சிறப்பாகக் குறளைப் பொருளுடன் கூறி அதிக மதிப்பெண்கள் பெறுகின்றார்கள, அவர்களுக்கு ஆண்டு இறுதியில் வள்ளுவன் விருது (பள்ளியின் தொடர் கோப்பை) பரிசாக வழங்கப்படும். மேலும் மிகச் சிறப்பாகக் குறளைக் கூறும் இருவருக்கு முதல் மற்றும் இரண்டாம் பரிசு வகுப்பு வாரியாக வழங்கப்படும். இதன் பயனாக வருடத்தின் இறுதியில் அனைத்து மாணவர்களும் 10 திருக்குறள்களில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள். முன்மழலை மற்றும் மழலை தவிர்த்து அனைத்து வகுப்பிற்கும் திருக்குறள் நேரம் உண்டு.
குழுப் பாட்டு
குழுப் பாட்டு என்பது வருடத்தின் இறுதியில் பள்ளி முழுவதும் பாடப் போகும் பாட்டு ஆகும், இந்தஆண்டு செந்தமிழ்நாடு எனும் குழுப்பாடலைப் பள்ளி பரிந்துரை செய்துள்ளது. ஒவ்வொரு வகுப்பிற்கும் பாடல் வரிகள் கொடுக்கப்பட்டு, இதனை ஆசிரியர்கள் நேரம் உள்ள போதெல்லாம் குழந்தைகளுக்குக் கற்றுத் தருவர், அதே போல் பெற்றோர்களும் குழந்தைகளுக்கு வீட்டில் கற்றுத் தருவர், ஆண்டு விழாவின் போது முழுப் பள்ளியும் தமிழ்ப்பண் மற்றும் தேசிய கீதத்துடன், இந்தப் பண்ணையும் இசைப்பர்.
மதிப்பீடு
பள்ளி ஆண்டு இறுதியில் மதிப்பெண்களுடன், குழந்தைகளை மதிப்பீடு செய்து வழங்கிய மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்படும். இந்த மதிப்பீடு கீழ்க்கண்ட தரவுகளின் வாயிலாக மதிப்பிடப்படும்.
வீட்டுப் பாடங்கள்
தேர்வு மதிப்பெண்கள்
வகுப்பில் நடந்து கொள்ளும் விதம்
குழுப்பாட்டு
வாசித்தல் அட்டவணை
திருக்குறள்
Join the Tamil School revolution!
Get in Touch
Ready to dive into the awesomeness of learning Tamil with us? Pop in your deets and we'll hit you up real quick. Can't wait to chat with ya!