-
மாணவர்கள் பள்ளி சபை முடிந்ததும் வகுப்பிற்கு சென்று அமைதியாக அமர வேண்டும்.
ஒவ்வொரு வாரமும் மாணவர்கள் தங்களது சொந்த சேர்ப்பான்(binder), புத்தகங்கள், பேனா, பென்சில், சுட்டிக்காட்டி(highlighter) போன்றவற்றை மறக்காமல் எடுத்து வர வேண்டும்.
ஆசிரியர்கள் மற்ற மாணவர்கள் மற்றும் பெரியவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்.
வகுப்பு மற்றும் பள்ளியின் விதிமுறை மற்றும் வழிமுறைகளை கவனமாக பின்பற்றவேண்டும்.
மறக்காமல் வீட்டுப்படங்களை ஒவ்வொரு வாரமும் முடித்து வர வேண்டும் .
வகுப்பில் ஆசிரியரோ, மாணவரோ பேசிக்கொண்டிருக்கும் போது, உங்களுடைய கருத்தை தெரிவிக்க உங்கள் கையை உயர்த்தி உங்கள்முறை வரும்போது பேச வேண்டும்.
மாணவர்கள் தங்களுடைய உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது
அவர்கள் ஒவ்வொருவரின் பொறுப்பாகும்.அனைவரையும் மரியாதையுடனும், அன்புடனும் நடத்த வேண்டும்.
வகுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
-
மாணவர்கள் தீய நடத்தையை காட்ட கூடாது.
அடுத்தவரை, உடலளவிலோ, மனதளவிலோ, வார்த்தைகளாலோ துன்புறுத்துதல் கூடாது.
உணவு பொருட்கள், குமிழி பசை(கம்) போன்றவற்றை வகுப்பறையில் உண்ணக்கூடாது.
வகுப்பில் செல்போன்களை நிறுத்தி வைக்க வேண்டும், குறுஞ்செய்தி அனுப்புவது, அழைப்பு மற்றும் காணொளி பார்ப்பது போன்றவற்றை கண்டிப்பாக செய்யக் கூடாது.
மதிப்பு மிகுந்த தங்கம், வெள்ளி, வைரம் போன்ற அணிகலன்களை வகுப்பிற்குள் கொண்டுவரக் கூடாது
-
மாணவர்கள் வகுப்பை தேர்ச்சி பெறுவதற்கு அவர்களின் பள்ளி வருகை 85% இருக்க வேண்டும்.
பெற்றோர்கள், தங்களுடைய பிள்ளைகள் வீட்டுபாடங்களை முடிக்கிறார்களா என
கவனிக்கவும், அவர்களுக்கு உதவி தேவைப்படும் சமயத்தில் உதவவும்.வீட்டில் பிள்ளைகளை தமிழில் பேசுமாறு சொல்லவும், அவர்களுடன் முடிந்தவரை தமிழிலேயே பேசவும்.
பெற்றோர்கள், பள்ளியின் தன்னார்வலர் குழு மற்றும் பிள்ளைகளுக்கான சிறப்பு பாடங்களில் உதவி தேவைப்படும் போது உங்களால் இயன்ற வகையில் உதவலாம்.
தினமும் 15 நிமிடம் உங்களது பிள்ளைகள் தமிழ்ப் படிக்க உதவவும்.
பெற்றோர்கள் பிள்ளைகளின் ஆசிரியர்களிடம் பாட சம்பந்தமான கேள்விகளைக் கேட்கலாம்.
நல்ல தமிழ் நிகழ்ச்சிகளை,ஆங்கில துணை உரையோடு(subtitle) தொலைக்கட்சியில் பார்க்க ஊக்குவிக்கவும்.
பள்ளியில் சிரமம் ஏதேனும் இருந்தால் தமிழ்ப் பள்ளி மேலாண்மைக் குழுவிடம் கூறி சுமூகமாக தீர்த்துக் கொள்ளவும்.
-
ஆசிரியர்கள் மாணவர்களின் பாடப்புத்தகங்கள் மற்றும் பாடத்திட்டங்களை பின்பற்றி பாடம் நடத்த வேண்டும்.
மாணவர்களைப் படிப்பதற்கு ஊக்குவிப்பதோடு,கல்வி கற்பதில் அவர்களின் முன்னேற்றத்தையும் மதிப்பீடு செய்தல் வேண்டும்.
மாணவர்களின் பழக்கவழக்கங்களையும்,நல்லொழுக்கத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு நல்ல குடிமகனாக/குடிமகளாக இருப்பதையும்,அனைவரையும் எவ்வாறு சரி சமமாக நடத்தவேண்டும் என்பதன் அவசியத்தையும் விளக்க வேண்டும்.
மாணவர்களின் நடத்தை மற்றும் செயல் திறனைப் பற்றி அவ்வப்போது பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டும்.