Books Accomplished by CTS Students!

சிறப்புச் செயல்பாடுகள்

பள்ளியின் சிறப்பு செயல்பாடுகள் மாணவர்களின் மொழித் திறனை பட்டை தீட்டுவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் அறிவித்த திறனையும் மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

திட்டங்கள் - Projects

 படி - பேசு - எழுது

ஒவ்வொரு பருவத்திற்கும் (each quarter) மாணவர்கள் கொடுக்கப்பட்ட தலைப்பிற்கு ஓர் திட்டப்பணியை தாங்களாகவே செய்து முடிக்கவேண்டும்.

  • முதல் பருவம் - படி - மாணவர்கள் அவர்கள் படிக்கும் நிலைக்கேற்ப ஒரு தமிழ் புத்தகத்தை படித்து ஒளிப்பதிவு செய்து கம்மிங் தமிழ் பள்ளியின் இணைய வழி வகுப்பறையில் சமர்ப்பிக்க வேண்டும். 

  • இரண்டாம்பருவம் - பேசு - மாணவர்கள் அவர்கள் படிக்கும் நிலைக்கேற்ப கொடுக்கப்பட்ட ஒரு தலைப்பில் தமிழில் வகுப்பறையில் பேச வேண்டும்.

  • மூன்றாம் பருவம் - எழுது - மாணவர்கள் அவர்கள் படிக்கும் நிலைக்கேற்ப ஒரு தலைப்பில் புத்தகம் ஒன்று எழுத  வேண்டும். அந்த புத்தகம் எழுத தேவையான செயலி கம்மிங் தமிழ் பள்ளி சார்பில் ஒவ்வொரு வகுப்பறைக்கும் வழங்கப்படும். இந்த புத்தகம் திருத்தம் செய்யப்பட்டு முற்றிலும் இலவசமாக வெளியிடப்படுகிறது.

பின் குறிப்பு: மூன்றாம் நிலையில் தாங்களே எழுதிய புத்தகத்தை பல மாணவர்கள் அடுத்த வருடத்திற்கான "படி" திட்டப் பணிக்கு பெருமையுடன் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

மதிப்பீடு

பள்ளி ஆண்டு இறுதியில் மதிப்பெண்களுடன், குழந்தைகளை மதிப்பீடு செய்து வழங்கிய மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்படும். இந்த மதிப்பீடு கீழ்க்கண்ட தரவுகளின் வாயிலாக மதிப்பிடப்படும். 

  •        வீட்டுப் பாடங்கள்

  •        தேர்வு மதிப்பெண்கள்

  •        வகுப்பில் நடந்து கொள்ளும் விதம்

  •        குழுப்பாட்டு 

  •        வாசித்தல் அட்டவணை 

  •        திருக்குறள் 

தங்க நாணயப் பரிசு

Golden Rewards

வகுப்பில் பாடங்களைக் கவனித்து, ஆர்வத்தோடு அனைத்து வகையிலும் வகுப்பில் தனது பங்களிப்பை நல்கும் குழந்தைகளுக்கு ஒரு தங்க நாணயம் வகுப்பு ஆசிரியரால் வழங்கப்படும். ஐந்து தங்க நாணயங்களைப் பெறும் குழந்தைகளை ஊக்குவிப்பதற்காக ஒரு சிறப்புப் பரிசு வழங்கப்படும்.

 புத்தக சங்கம்

Reading Club

ஒவ்வொரு வாரமும் பள்ளி நூலகத்திலிருந்து ஒவ்வொரு வகுப்பும் அவர்கள் நிலைக்கேற்ப புத்தகங்கள் வழங்கப்படும். அதை பெற்றோர் பள்ளி தொடங்கிய முதல் ௧௫ நிமிடங்கள் ஒவ்வொரு மாணவருடன் அமர்ந்து படிப்பார்கள்.


விளையாட்டு வழி கல்வி

Puzzles and Games

விளையாட்டு வழியாக கற்கப்படும் பாடங்கள் மனதில் ஆழமாகப் பதியும். அதற்கேற்ப வடிவமைக்கப்பட்ட விளையாட்டுகள் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகுப்பும் அவர்கள் நிலைக்கேற்ப இணையவழி தமிழ் சொல் விளையாட்டுகளை விளையாடுவர்.